search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழக மக்கள் வளர்ச்சி"

    தமிழக மக்கள் வளர்ச்சியில் திராவிட கட்சிகளுக்கு அக்கறை இல்லை என்று திண்டுக்கல்லில் நடைபெற்ற கூட்டத்தில் எச்.ராஜா பேசினார்.#BJP #HRaja
    திண்டுக்கல்:

    மத்திய அரசின் 4 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் திண்டுக்கல்லில் நடந்தது. கூட்டத்தில் எச்.ராஜா பேசும் போது கூறியதாவது:-

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் ஊழல் இல்லாத நிர்வாகத்தை தருவோம் என்று வாக்குறுதி அளித்து அதனை நிறைவேற்றியுள்ளோம். நாடு முழுவதும் 30 கோடி ஏழை மக்களுக்கு வங்கி கணக்கு தொடங்கப்பட்டுள்ளது.

    7 கோடி வீடுகளுக்கு கழிப்பறை கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. நிலையான ஆட்சி இருந்தால் மட்டுமே இது போன்ற சாதனைகள் சாத்தியமாகும்.

    தற்போது சினிமாவில் ஓய்வு பெற்ற நடிகர்கள் முதல்வர் கனவில் உள்ளனர். அவர்கள் இளைஞர்கள் சிலரை வசப்படுத்தி தீய செயல்களில் ஈடுபட வைக்கின்றனர். அவர்கள் பின்னால் இளைஞர்கள் செல்ல வேண்டாம்.

    தமிழகத்தில் மக்கள் நலனில் திராவிட கட்சிகளுக்கு ஒரு போதும் அக்கறை இருந்ததில்லை. தமிழக அரசு சொத்து வரியை 50 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது. உள்ளாட்சிகளில் போதுமான அடிப்படை வசதிகள் செய்து தராத நிலையில் சொத்து வரியை உயர்த்தி இருப்பது கண்டனத்துக்கு உரியது. இதனை திரும்ப பெற வேண்டும்.


    மேட்டூர் அணை நிரம்பியதால் காவிரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. ஆனால் திட்டமிட்டு ஏரி கால்வாய்களை தூர் வாராததால் அணையின் நீர் வீணாகி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

    வருமான வரி சோதனைக்கும், மத்திய அரசுக்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது. மத்திய அரசு அனைத்து மாநில அரசுகளுடன் இணக்கமாக இருக்கவே விரும்புகிறது. அதன்படிதான் தமிழக அரசுடன் நட்பாக உள்ளது. இதற்கும் கூட்டணிக்கும் சம்பந்தம் கிடையாது.

    இவ்வாறு அவர் கூறினார். #BJP #HRaja
    ×